/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., நடக்கும் நாசர் புளியங்குளம் மக்கள்
/
ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., நடக்கும் நாசர் புளியங்குளம் மக்கள்
ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., நடக்கும் நாசர் புளியங்குளம் மக்கள்
ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., நடக்கும் நாசர் புளியங்குளம் மக்கள்
ADDED : ஜூன் 28, 2025 12:12 AM
காரியாபட்டி:நாசர் புளியங்குளம் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி. மீ., தூரம் நடக்க வேண்டி இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
காரியாபட்டி நாசர் புளியங்குளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்வசிக்கின்றனர். இக்கிராமத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி. மீ., தூரமுள்ள முஷ்டக்குறிச்சிக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. அவ்வாறு சென்று வர ஒரு நாள் வீணாகி, விவசாய வேலை பாதிக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்களுக்குள் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க விட்டால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. வயதானவர்கள் நடந்து சென்று பொருட்களை சுமந்து வருவது கடினம்.
பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆடி காத்து துவங்கி உள்ளது. பொருட்களை தலைசுமையாக சுமந்து நடந்து செல்ல பெரிதும் சிரமம் ஏற்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.