/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நவராத்தி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
/
நவராத்தி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
ADDED : செப் 26, 2025 01:54 AM

விருதுநகர்: விருதுநகரில் நவராத்திரி துவங்கி நடந்து வரும் சூழலில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மாவட்டத்தில் மகாளய பட்சம் முடிந்து செப். 22 முதல் நவராத்திரி விழா துவங்கியது. இதையொட்டி கோயில்களில், வீடுகளில் கொலு வைக்கும் வைபவம் துவங்கியது. கடந்த ஒரு வாரமாக கதர் பவன், தேசபந்து மைதான கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. கதர் பவனில் வைகுண்டம் செட், ரிஷப வாகன செட், லலிதாம்பிகை செட், ரிஷப வாகனம் செட், நவகிரகம் செட் ஆகிய செட் பொம்மைகளும், பால விநாயகர், லிங்கம் மீனாட்சி, சிவகுடும்பம், வள்ளலார், ஆண்டாள், அத்திவரதர் ஆகிய தனி பொம்மைகளும் கிடைக்கின்றன. இங்கு பொம்மைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. தினசரி கொலு பொம்மை, கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தற்போது புதிதாக திருச்சி உச்சி பிள்ளையார் செட், நவநாயகி செட், காய்கறி வகைகள் பொம்மைகள் வரப்பெற்றுள்ளன.
இதே போல் மார்க்கெட் பகுதிகளில பல விதமான சுவாமி பொம்மைகள், காமதேனு பொம்மைகள் வந்துள்ளன. மக்கள் கொலு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.