ADDED : ஏப் 28, 2025 05:28 AM
சாத்துார்: சாத்துார் அருகே ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
பராசக்தி மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா அதை விமரிசையாக நடைபெறும். இக்கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளூர் வருவது வழக்கம்.
இக்கோயிலில் ஓடிய தேர் பழமையானதை தொடர்ந்து தற்போது புதிய தேர் செய்யப்பட்டு நேற்று காலை 10:00 மணிக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் நான்கு ரத வீதி வழியாக இழுத்து வந்து வலம் வரச் செய்தனர்.
நேற்று இரவு 9:00 மணிக்கு மேல் பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து நாள் தோறும் அம்மன், ரிஷபம், சிம்மம், குதிரை பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏழாயிரம்பண்ணை இந்து நாடார் உறவின்முறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

