sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு மருத்துவக்கல்லுாரியில் புதிய விளையாட்டு மைதானங்கள்

/

அரசு மருத்துவக்கல்லுாரியில் புதிய விளையாட்டு மைதானங்கள்

அரசு மருத்துவக்கல்லுாரியில் புதிய விளையாட்டு மைதானங்கள்

அரசு மருத்துவக்கல்லுாரியில் புதிய விளையாட்டு மைதானங்கள்


ADDED : செப் 30, 2025 03:41 AM

Google News

ADDED : செப் 30, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கான கபடி, எறிபந்து, கைப்பந்து, கோக்கோ ஆகிய விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைக்கும் பணிகள் ரூ.40 லட்சத்தில் விரைவில் துவங்கப் படவுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இக்கல்லுாரியில் தற்போது இறுதியாண்டு மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இவர்களுக்கு திறக்கப்பட்ட நாள் கல்லுாரி வளாகத்தில் இதுவரை முறையான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் காலை, மாலை நேரங்களில் கல்லுாரிக்கு எதிரே உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நான்கு வழிச்சாலையை கடந்து சென்று மருத்துவ மாணவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் டீன் சீதாலட்சுமி பணியில் இருந்த போது கல்லுாரி வளாகத்தில் கிரிக்கெட், கால்பந்து, கைபந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டு மைதானங்கள் ரூ.49 லட்சத்தில் அமைக்கும் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.ஆனால் அவர் பணி ஓய்வு பெற்ற பின் பல்வேறு காரணங்களால் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது இறுதியாண்டு மாணவர்கள் விளையாட்டு மைதானம் அவசியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனால் தற்போது கலையரங்கத்திற்கும், மாணவர்கள் விடுதிக்கும் அருகே உள்ள இடத்தில் கபடி, எறிபந்து, கைப்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுகளுக்கான மைதானங்களை ரூ.40 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலமாக அமைக்க டீன் ஜெயசிங் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us