/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய தாலுகா அலுவலக கட்டடம்

ADDED : ஜூலை 12, 2025 04:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலக புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்தும், எப்போது திறக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் தாலுகா அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதாலும், இடப்பற்றாக் குறையால் வருவாய்த்துறை அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது உள்ள அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த காலி இடத்தில் தரைத்தளம் மற்றும் மேல் தளத்துடன் தாசில்தார், அதிகாரிகளுக்கு தனித்தனி அறைகள், பொதுமக்கள் உட்கார இருக்கையுடன்கூடிய வசதிகள், மீட்டிங் ஹால் உட்பட பல்வேறு வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது முழு அளவில் பணிகள் முடிந்துள்ள நிலையில் எப்போது திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என வருவாய்த் துறை அலுவலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.