பனை மரத்தில் தவறி விழுந்து இறந்த வாலிபர் கண்கள் தானம்
பனை மரத்தில் தவறி விழுந்து இறந்த வாலிபர் கண்கள் தானம்
UPDATED : ஜூலை 04, 2026 11:21 PM
ADDED : ஜூலை 04, 2026 11:18 PM
விருதுநகர்:துாத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கீழநாட்டுக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 29. இவர் ஸ்வீட் மாஸ்ட்ராக பணிபுரிந்து வந்தார். இவர் ஜூலை 3 இருக்கன்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பனை மரத்தில் ஏறியவர் நுங்கு வெட்டிவிட்டு கீழே இறங்கிய போது தவறி விழுந்து பலியானார்.
இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் முத்துப்பாண்டியின் இரு கண்கள் தானமாக பெறப்பட்டது.
இக்கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
