/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நித்திய கல்யாணி ஏற்றுமதி கருத்தரங்கு
/
நித்திய கல்யாணி ஏற்றுமதி கருத்தரங்கு
ADDED : அக் 28, 2024 04:57 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண் தொழில் ஊக்குவிப்பு மையம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், சென்னை தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:
உலக அளவில் இருக்கக்கூடிய விவசாய பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி வாய்ப்பு 10 முதல் 15 சதவிகிதம் நித்திய கல்யாணி ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் உள்ளது. இதன் பூ இலை விதை தண்டு உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் கொண்டவை. விருதுநகர் மாவட்டத்தில் 375 ஏக்கர் பரப்பளவில் நித்திய கல்யாணி பயிரிடப்படுகிறது, என்றார்.
கருத்தரங்கில் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் செல்வி ரமேஷ், திருச்சி வேளாண்மை கல்லூரி முதல்வர் வன்னியராஜன், இணை பேராசிரியர் சாந்தி, அருப்புக்கோட்டை தோட்டக்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.