/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் வசதி இல்லை: மடைகள் சேதத்தால் வீணாகும் தண்ணீர்
/
பஸ் வசதி இல்லை: மடைகள் சேதத்தால் வீணாகும் தண்ணீர்
ADDED : அக் 20, 2024 03:23 AM
காரியாபட்டி,: பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்ல ஏதுவாக காலை நேரத்தில் பஸ் வசதி இல்லாதது, மடைகள் சேதமாகி மழை நீர் வீணாக வெளியேறி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவது, நவீன மயானம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதியிலிருந்து, பாலவநத்தம், அருப்புக் கோட்டை ரோட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று படிக்கின்றனர். வரலொட்டி, நாகம்பட்டி வழியாக எளிதில் சென்று வர முடியும். தற்போது விருதுநகரை சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் நேரம், பணம் விரையம் ஆவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
திம்மன்பட்டி அருகே மல்லாங்கிணர் பேரூராட்சி மக்களுக்காக ரூ. பல கோடி செலவில் நவீன எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. ஓராண்டாகியும் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டடம், பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. ரூ.பல கோடிகள் செலவு செய்து ஊருணி சீரமைக்கப்பட்டது. நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டது.
தற்போது பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து உள்ளன. விளக்குகள் எரியவில்லை. ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாயில் 4 மடைகள் உள்ளன. அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன. 3 ஆண்டுகளாக அப்பகுதியில் மழை பெய்ததால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. மடைகள் சேதம் அடைந்ததால் சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது. விவசாயம் செய்ய முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.