/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக பண பட்டுவாடா இல்லை
/
நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக பண பட்டுவாடா இல்லை
நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக பண பட்டுவாடா இல்லை
நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக பண பட்டுவாடா இல்லை
ADDED : ஜன 22, 2025 06:25 AM
காரியாபட்டி : காரியாபட்டி, நரிக்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 நாட்களாக பண பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்ததால் அதிக அளவில் விவசாயிகள் நெல் நடவு செய்தனர். வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் நெல் பயிர் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மட்டுமே நெல் பயிர் தாக்குப்பிடித்ததால், ஓரளவிற்கு நெல் அறுவடை செய்தனர்.
இதையடுத்து ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. கிடைத்த நெல்களை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்றனர். இதுவரை ஒவ்வொரு வாரமும் பணம் பட்டுவாடா செய்யப்படும். வாங்கிய கடன், மற்ற செலவுகளை சரி கட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த முறை கொள்முதல் செய்து 20 நாட்கள் ஆகியும் இதுவரை பண பட்டுவாடா செய்யவில்லை.
இதுவரை 7 ஆயிரம் நெல் மூடைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பண பட்டுவாடாவை எதிர்பார்த்து விவசாயிகள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். உடனடியாக பண பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.