/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் போக்குவரத்து போலீசில் 30 ஆண்டாக இன்ஸ்பெக்டர் நியமனமில்லை
/
விருதுநகர் போக்குவரத்து போலீசில் 30 ஆண்டாக இன்ஸ்பெக்டர் நியமனமில்லை
விருதுநகர் போக்குவரத்து போலீசில் 30 ஆண்டாக இன்ஸ்பெக்டர் நியமனமில்லை
விருதுநகர் போக்குவரத்து போலீசில் 30 ஆண்டாக இன்ஸ்பெக்டர் நியமனமில்லை
ADDED : அக் 28, 2025 03:32 AM
விருதுநகர்: விருதுநகர் போக்குவரத்து போலீஸ் பிரிவு கடந்த 30 ஆண்டுகளாக எஸ்.ஐ., தலைமையிலான ஸ்டேஷனாக செயல்படுகிறது. இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்தி கூடுதல் போலீசாரை நியமிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் போக்குவரத்து போலீஸ் பிரிவில் 1990ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடந்து சில மாதங்களுக்கு முன்பு வரை 5 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். கூடுதலாக தற்போது 4 பேர் பணியமர்த்தப்பட்டு மொத்தம் 9 பேர் பணியில் உள்ளனர்.
ஆனால் 30 ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை எஸ்.ஐ., தலைமையில் செயல்படும் ஸ்டேஷனாக விருதுநகர் போக்குவரத்து பிரிவு உள்ளது. இதனால் கூடுதல் போலீசாரை நியமிக்க முடியாமல், பணிகளை சரிவர செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
முக்கியஸ்தர்கள் வருகை, திருவிழா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்யும் பணிகளுக்கு தேவைப்படும் கூடுதல் போலீசாரை விருதுநகர் உட்கோட்டத்தில் உள்ள மற்ற ஸ்டேஷன்களில் இருந்து கேட்டு பெற வேண்டிய நிலையே தொடர்கிறது.
நகர்பகுதியில் நாளுக்கு நாள் டூவீலர், ஆட்டோ, கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் அரசு மருத்துவமனை ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆத்துப்பாலம், மீனாம்பிகை பங்களா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டிய போலீசார், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் அபராதம் விதிக்கும் பணியில் மட்டும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
டி.டி., வழக்குகளை அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என உயர்அதிகாரிகள் அந்தந்த உட்கோட்டங்களில் அழுத்தம் கொடுப்பதால் போலீசார் பணிச்சுமையுடன் மன அழுத்தத்தில் பணிபுரியும் நிலைக்கு ஆளாகி யுள்ளனர்.
எனவே விருதுநகர் அரசு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷனாக தரம் உயர்த்தி, கூடுதல் போலீசாரை நியமிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும்.

