/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் தொட்டி; குப்பையால் சுகாதாரக்கேடு
/
செயல்படாத குடிநீர் தொட்டி; குப்பையால் சுகாதாரக்கேடு
செயல்படாத குடிநீர் தொட்டி; குப்பையால் சுகாதாரக்கேடு
செயல்படாத குடிநீர் தொட்டி; குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : ஜன 18, 2024 05:35 AM
ராஜபாளையம்: தேங்கி கிடக்கும் சாக்கடைகளால் கொசுத்தொல்லை, சுகாதாரக் கேடு, மெயின் ரோட்டில் கடை விரிப்பு என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ராஜபாளையம் நகராட்சி 20வது வார்டு மக்கள்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் காமராஜர் நகர் 6 தெருக்கள், சர்ச் தெரு, ரயில்வே பீடர் ரோடு வடக்கு பகுதி, செவல்பட்டி தெற்கு தெரு ஆகியவை இவ்வார்டில் உள்ளன. நகராட்சியிலேயே அதிக வரி வருவாய் வரும் ஏ பிரிவில் இருந்தும் போதிய மின்விளக்கு, குப்பைஅகற்றும் பணி நடைபெறுவதில்லை. சமூக விரோதிகள் நடமாட்டம், திருட்டு அதிகளவில் உள்ளது. காமராஜர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் வாறுகால் அமைக்காமல் ரோடு பணிகள் முடிந்து விட்டன.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.பி மில்ஸ் ரோட்டிற்கு பஸ்கள் செல்லும் பிரதான சாலையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
காமராஜர் நகர் 6வது தெரு, 3வது தெரு, சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறிவிட்டது.இங்குள்ள செயல்படும் அடிகுழாய் உயர்த்தப்படாமல் ரோடு போட்டுள்ள தால் பயன்பாடு இல்லாமல் மாறியுள்ளது. தெரு நாய்கள் அதிகரித்து பள்ளி குழந்தைகளை விரட்டுகின்றன.
தினசரி துாய்மை பணி செய்தல், குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகியவை இந்த வார்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.