/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செட்டியார்பட்டியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
/
செட்டியார்பட்டியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
செட்டியார்பட்டியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
செட்டியார்பட்டியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : அக் 30, 2025 03:32 AM

தளவாய்புரம்: செட்டியார்பட்டி பேரூராட்சி முன்பு மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் உள்ளதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
செட்டியார்பட்டி பேரூராட்சி சுற்றி குடியிருப்புகள் தினசரி காய்கனி சந்தை, நுால் மார்க்கெட் உணவகங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியினருக்காக தானியங்கி குடிநீர் நிலையம் சுத்திகரிப்பு இயந்திரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டது. இதன் மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஐந்து ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டது.
தானியங்கி மூலம் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தி பெறும் வகையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு மிஷின் அமைத்த வேகத்தில் சில நாட்களிலேயே செயல்பாடாமல் முடங்கியது. இன்று வரை அதை சரி செய்ய அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.
இதுகுறித்து ராமர்: குடியிருப்பு வாசிகள், வணிகர்கள் அனைவருக்கும் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த தானியங்கி இயந்திரம் பழுதை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு.

