ADDED : அக் 01, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை, அக். 1--
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட துவக்க விழா நடந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் சோலைமலை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பிரீவா வரவேற்றார். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா பேசினார். மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தினர். சித்த மருத்துவம், பெண் கல்வியின் முக்கியத்துவம்,மரம் நடுதல், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
உதவி தலைமை ஆசிரியர் விமலா, ஆசிரியர்கள் காஜா முகைதீன் ஹேமலதா, சென்னம்மாள் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் பொன்ராஜ் நன்றி கூறினார். - -