/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சம வேலைக்கு சம ஊதியம் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு எதிர்க்க நிதி திரட்டும் செவிலியர்

ADDED : அக் 05, 2025 01:57 AM
விருதுநகர்:தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கிற்காக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நிதி திரட்டும் இயக்கத்தை அக்.10 வரை நடத்துகிறது என பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி.,) 2015ல் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.7700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பின் காலமுறை ஊதியத்திற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த முறையில் அனைத்து செவிலியர்களும் நிரந்தரம் செய்யப்படவில்லை.
2018ல் சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் 6 மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசு நிறைவேற்றாததால் சங்கத்தின் சார்பில் 2019ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்தனர். குழுவின் அறிக்கையில் உண்மை தன்மை இல்லாததால் இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து பணியின் தன்மை ஆராய உத்தரவிடப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் 3 மாதத்தில் எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணப்பலன்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கிற்காக அனைத்து செவிலியர்களிடமும் உண்டியல் மூலமாக அக்.1 முதல் அக். 10 வரை நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.