செவிலியர்களை முழு ஊதியத்தில் பணி நிரந்தரம்: மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
செவிலியர்களை முழு ஊதியத்தில் பணி நிரந்தரம்: மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
UPDATED : நவ 01, 2026 08:21 PM
ADDED : நவ 01, 2026 08:16 PM
விருதுநகர்: ‛தொகுப்பூதிய செவிலியர்களை குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்வதை கைவிட்டு, முழு ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’, என செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் வலியுறுத்தினார்.
அவரது அறிக்கை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி.,) தேர்வு மூலம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என த.வெ.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதற்கேற்ப 2500 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என த.வெ.க., அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை வெளிவராத நிலையில் துறை செயலாளர், அமைச்சரை சந்தித்தோம். தற்போது உள்ள கிரோடு பே 4450 உருவாக்குவதற்கு பதிலாக சரி பாதி அளவு குறைந்த ஊதிய நிலையான கிரேடு பே 2800ல் செவிலியர்களுக்கான புதிய பணியிடங்களை உருவாக்க அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
கொரோனா காலகட்டம் முதல் பேரிடர் காலங்கள் வரை பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் சேவை செய்த செவிலியர்களின் ஊதிய மாற்ற முடிவை அரசு கைவிட்டு விட்டு முழு ஊதியத்துடன் புதிய பணியிடங்களை உருவாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
