/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
/
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
ADDED : மே 13, 2025 06:50 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்தல், உயர்நீதிமன்றம் உத்தரவின்படி எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு உள்பட 25 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.ஆர்.பி., செவிலியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 172 எம்.ஆர்.பி., செவிலியர்கள் நேற்று கோரிக்கை அட்டைகளை அணிந்து செவிலியர்கள் தினமான நேற்று பணியில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை அஞ்சல் அட்டைகள் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.