ADDED : அக் 19, 2024 05:26 AM

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு, பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.
மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டது. மாநில துணை தலைவர் அபராஜீதன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக் குழு தலைவர் வைரவன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் துணை தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் செல்வக்குமார், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மாயமலை, அங்கன்வாடி, உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி, சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொன்ராஜ் வாழ்த்தினர்.
அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கங்காதரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான், மாநில துணை தலைவர்கள் மிக்கேலம்மாள், குப்புசாமி ஆகியோர் கோரிக்கை தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.