ADDED : நவ 01, 2026 07:12 PM

அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் ரோட்டில் இன்று (நவ.,1) காலை பழமையான ஆலமரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது.
வத்திராயிருப்பு போலீசார், தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தினர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல் பெரியாறு அணை ரோடு, அழகாபுரி ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு உட்பட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து காணப்படுகிறது.
பழமையான மரங்கள் வேர் பகுதியில் பிடிமானம் இழந்து எப்போதும் ஒடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
