/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்
/
ஆபரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்
ADDED : மே 18, 2025 12:07 AM

விருதுநகர்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துார் பதிலடியில் வென்றதை கொண்டாடும் வகையில் விருதுநகரில் பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் வெற்றி ஊர்வலம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் வன்னியராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள காந்தி சிலையில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே நிறைவடைந்தது.
*ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் சார்பில் ஜவகர் மைதானத்தில் ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி பேரணி நடந்தது. ராஜபாளையம் மூத்தோர் சங்கத்தின் சார்பில் தலைவர் பெத்துராஜ் தலைமையில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது. இதில் தேசிய கொடி ஏந்தி ஏராளமானோர் பாரத் மாதா கி ஜே என்கிற கோஷத்தோடு அணிவகுத்து சென்றனர். ஊர்வலம் ஜவஹர் மைதானத்தில் தொடங்கி காந்தி கலை மன்றம் தென்காசி ரோடு அம்பலப்புளி பஜார் வழியே மீண்டும் ஜவஹர் மைதானம் அடைந்தது.