/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு
/
குழந்தை தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு
ADDED : நவ 17, 2025 02:28 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்புச்சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். சட்டத்திற்கு எதிராக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது, விற்பனை செய்வது குற்றம். புகார் எழுந்தால் வழக்கு பதிந்து விசாரணை நிருபிக்கப்பட்டால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.
குழந்தையை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கணவன், மனைவி சான்றுகளுடன் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலகம், விருதுநகர் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

