/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரமக்குடி பாலியல் வழக்கு நவ. 27க்கு ஒத்திவைப்பு
/
பரமக்குடி பாலியல் வழக்கு நவ. 27க்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 21, 2024 01:57 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நவ.27க்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் பரமக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜ முகமது, பிரபாகரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை 5 மாதத்துக்குள் விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சி விசாரணை துவங்க உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கின் விசாரணையை நவ. 27க்கு நீதிபதி சுதாகர் ஒத்தி வைத்தார்.

