/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் பஸ்கள் நிற்காத இடத்திற்கு ரூ.9.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
/
விருதுநகரில் பஸ்கள் நிற்காத இடத்திற்கு ரூ.9.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
விருதுநகரில் பஸ்கள் நிற்காத இடத்திற்கு ரூ.9.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
விருதுநகரில் பஸ்கள் நிற்காத இடத்திற்கு ரூ.9.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
ADDED : நவ 02, 2025 04:22 AM

விருதுநகர்: விருதுநகர் மேற்கு போலீஸ் அவுட் போஸ்ட் அருகே அரசு போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் பஸ்கள் நிற்காத இடத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.9.50 லட்சத்தில் பயணிகளுக்கான பஸ் ஸ்டாப் கட்டியுள்ளனர்.
விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அருகே மட்டுமே பஸ்கள் நின்று செல்வது வழக்கம். இதற்கு அடுத்ததாக டவுன் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிலும், புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்கள் மீனாம்பிகை பங்களாவிலும் நின்று செல்லும்.
இந்நிலையில் சர்வீஸ் ரோடும், மதுரை ரோடும் இணையும் இடத்தில் மேற்கு போலீஸ் அவுட் போஸ்ட் அருகே பஸ்கள் நின்று செல்லாத இடத்தில் எம்.எல்.ஏ., சீனிவாசன், தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.9.50 லட்சத்தில் பயணிகளுக்காக நிழற்குடை கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதுநகரில் ஆத்துப்பாலம், பாண்டியன் நகர், சிவகாசி ரோடு உள்பட பல இடங்களில் பயணிகள் நிற்பதற்கு போதிய பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருக்கும் நிலையில் பஸ்கள் நிற்காத இடத்திற்கு தேவையில்லாமல் நிழற்குடை கட்டி அரசின் வரிப்பணத்தை வீணாக்கியுள்ளனர். இதன் முன்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க மண் கொட்டுவதற்காக லோடு இறக்கி வைத்துள்ளனர்.
இங்கு தொலை துார, நகர் பஸ்கள் நிற்குமிடம் என இதுவரை பஸ்கள் நிற்காத இடத்திற்கு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரிப்பணத்தை வீணாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தேவையற்ற கட்டுமானங்கள் நகர்பகுதியில் நடப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

