/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்திற்கு பூட்டு பயணிகள் அல்லல்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்திற்கு பூட்டு பயணிகள் அல்லல்
பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்திற்கு பூட்டு பயணிகள் அல்லல்
பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்திற்கு பூட்டு பயணிகள் அல்லல்
ADDED : டிச 05, 2024 05:33 AM

விருதுநகர்: விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தில் பராமரிப்பு பணிக்கு பூட்டு போட்டுள்ளதாலும் மாற்று ஏற்பாடு இல்லாததாலும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் சிறுநீர் கழிப்பிடம் செயல்படுகிறது. 5 நாட்களாக பூட்டு போடப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் பஸ்சில் இருந்து ஏறி, இறங்கும் பயணிகள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க முடியாமல் திண்டாடும் சூழல் உள்ளது.
சிலர் கழிப்பிடம் அருகிலேயே திறந்த வெளியில் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து பஸ் ஸ்டாண்டின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே பராமரிப்பு பணியை விரைந்து முடித்து கழிப்பிடத்தை செயல்படுத்த வேண்டும்.
நகராட்சி கமிஷனர் சுகந்தி கூறுகையில், கழிவுநீர் வெளியேறாமல் இருந்ததால் பூட்டப்பட்டது. சரி செய்யப்பட்டு விட்டது. இன்று செயல்படுத்தப்படும், என்றார்.