/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் பயணிகள் திணறல்
/
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் பயணிகள் திணறல்
ADDED : ஏப் 05, 2025 06:13 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்ல தனியார் பஸ்களில் ரூ.16க்கு பதில் ரூ.18 கட்டணமாக மூன்று மாதங்களாக வசூலிக்கப்பட்டு வருவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்ல அரசு, தனியார் பஸ்களில் ரூ.16 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக விருதுநகர் செல்லும் பஸ்கள் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள் செல்ல வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
இதனால் பஸ்களுக்கான டீசல், செலவு அதிகரித்துள்ளதால் அருப்புக் கோட்டையில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்களில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகருக்கு ரூ.16க்கு பதில் ரூ.18 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன் ஆகியோர் கூறுகையில், கட்டண உயர்வால் மக்கள் கூடுதல் பொருளாதார செலவை சந்தித்து வருகின்றனர். மேலும் பஸ்சின் பெயர், வண்டி எண் இல்லாமல் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. இது மூன்று மாதங்களாக நடந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

