/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரிசோதனை கட்டணங்கள் ஆன்லைனில் மட்டுமே வசூல் நோயாளிகள் பரிதவிப்பு
/
பரிசோதனை கட்டணங்கள் ஆன்லைனில் மட்டுமே வசூல் நோயாளிகள் பரிதவிப்பு
பரிசோதனை கட்டணங்கள் ஆன்லைனில் மட்டுமே வசூல் நோயாளிகள் பரிதவிப்பு
பரிசோதனை கட்டணங்கள் ஆன்லைனில் மட்டுமே வசூல் நோயாளிகள் பரிதவிப்பு
ADDED : ஜன 03, 2025 12:27 AM
விருதுநகர்:அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான கட்டணங்களை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக மருத்துவ சேவைகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் யு.பி.ஐ., வசதி இல்லாத, கையில் மட்டுமே பணம் வைத்திருக்கும் நோயாளிகள், உறவினர்கள் அவதிப்படும் சூழல் உள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணங்களை தமிழக மருத்துவ சேவைகள் கழகம் வசூலிக்கிறது.
இந்த கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ரொக்கமாகவும், கையில் பணமின்றி வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலும், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்த முடிந்தது. ஆனால் தற்போது பரிசோதனை கட்டணங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே வசூல் செய்ய வேண்டும், ரொக்கமாக வசூலிக்கக்கூடாது என தமிழக மருத்துவ சேவைகள் கழகம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவனைக்கு வரும் ஏழை மக்கள் பலரிடம் ஸ்மார்ட் போன், யு.பி.ஐ., போன்ற வசதிகள் இல்லை. இதனால் பரிதவிக்கின்றனர்.