தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உயருது துவரம் பருப்பு குறையுது பாசிப்பயறு விலை

உயருது துவரம் பருப்பு குறையுது பாசிப்பயறு விலை

உயருது துவரம் பருப்பு குறையுது பாசிப்பயறு விலை


UPDATED : நவ 21, 2026 06:32 PM

ADDED : நவ 21, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:32 PM ADDED : நவ 21, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.1800 முதல் ரூ.1900 உயர்ந்து ரூ.14,200 முதல் ரூ.14,600, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.7800 முதல் ரூ.8000 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.3400, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6757, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.140 குறைந்து ரூ.2150, ரவை 30 கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.1600, மைதா 90 கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.4870, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.80 குறைந்து ரூ.2850, பொரிகடலை 50 கிலோ ரூ.5500, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.8600 என விற்கப்படுகிறது.

பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.10,500 முதல் ரூ.10,800, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ.11,800 முதல் ரூ.12,300, உளுந்து லயன் 100 கிலோ ரூ.7800 முதல் ரூ.8300, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7400 முதல் ரூ.7500, தொலிபருப்பு 100 கிலோ ரூ.9300 முதல் ரூ.9500, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.250 உயர்ந்து ரூ.5550 என விற்கப்படுகிறது.

மல்லி லயன் 40 கிலோ ரூ.6800, மல்லி நாடு 40 கிலோ ரூ.6500 முதல் ரூ.7200, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.22,000 முதல் ரூ.28,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ.24,000 முதல் ரூ.28,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து ரூ.6600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2310 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us