/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காத்திருப்பு: கார்பன் சமநிலை பகுதியாக உருவாக்கும் நடவடிக்கை: சஞ்சீவி மலை காப்புக் காடுகளை பாதுகாக்கும் திட்டம்

ADDED : செப் 30, 2024 04:25 AM
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள சுற்றுச்சூழல் மண்டலத்திற்கான மேலாண்மை திட்டம் மூலம் ராஜபாளையம் நகராட்சி சுற்றுப்பகுதியை கார்பன் சமநிலை பகுதியாக உருவாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட அறிவிப்பு வெளியானது.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் 2023 ஆக. மாதம் ராஜபாளையத்தில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மெய்ய நாதன், கலெக்டர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் கீழ் நகரின் நடுவே உள்ள சஞ்சீவி மலை காப்புக்காடுகளை பாதுகாத்தல் மற்றும் பசுமை பரப்பை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பூங்காக்களை வடிவமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பசுமை எரிசக்தி முறைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்முறை திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
சஞ்சீவி மலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், புதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல், வனவிலங்குகளுக்கான உயிர் சூழலை பராமரித்து கண்காணித்தல் போன்ற நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
இதற்கான செயல்முறை திட்ட வரையறை, செலவினம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வெளியிடப்பட்டு ரூ.10 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கான எந்தவித பன்முகத்தன்மை சூழல் பணிகள் நடைபெறாமல் இதுவரை 3 முறை காட்டுத்தீ ஏற்பட்டு இப்பகுதி வனவிலங்குகள் மூலிகைகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
எனவே அறிவித்தபடி பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.