ADDED : செப் 29, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : - ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம், முன்னாள் கமிஷனர் மணி, இன்ஜினியர் பெரியசாமி தலைமையில் நடந்தது.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கவுரவ தலைவர்களாக மணி, திருமூர்த்தி, தலைவராக முருகேசன், துணைத் தலைவர்களாக கோட்டை, பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக ஆறுமுகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சம்பள பட்டியல் ஆன்லைனில் எடுப்பதற்கு வழிமுறை செய்ய அரசை கேட்டுக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.