/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
70, 80 வயது ஆகும்போது 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் வலியுறுத்தல்

ADDED : மே 30, 2025 01:44 AM
விருதுநகர்:ஓய்வூதியம் பெறுவோருக்கு70 வயது நிறைவடையும் போது10 சதவீதமும், 80 வயது நிறைவடையும் போதுமேலும் 10 சதவீதமும்கூடுதலாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் எனதமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கத்தின்மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது:
2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அனைவருக்கும் அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச சட்டப்பூர்வ ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கவேண்டும்.
ஓய்வூதியம் தொடர்பாக ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வரும் வருவாய் கிராம ஊழியர்கள், ஓய்வு பெற்ற சிவில் சப்ளை பணியாளர்கள் ஆகியோரின் ஓய்வூதியம் சார்ந்த நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள அகவிலைப்படி, ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்கவேண்டும்.
போக்குவரத்து கழகங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு லாப நோக்கின்றி சேவைகளை செய்து வருவதால், ஓய்வூதியம் வழங்கும் 'ட்ரஸ்ட்' என்ற ஏற்பாட்டை கைவிட்டு, கழகங்களின் வரவு - செலவு வித்தியாசங்களை அரசே ஈடுகட்ட தனது பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியப் பணியில் உள்ளவர்களுக்கு எந்த தேதியில் அகவிலைப் படி வழங்கப்படுகிறதோ அதே தேதியில் இருந்து ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப் படியைவழங்கவேண்டும்.
மின்வாரிய தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் இருவருக்கும் தொழிற்தாவா சட்டம் பிரிவு ஒப்பந்தத்தின்படி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போதெல்லாம் உயர்த்தி வழங்குகிறதோ அந்த தேதியிலிருந்தே மின்வாரியமும் வழங்கும் எனும் ஷரத்து ஏற்கப்பட்டு அமலில் இருக்கும் நிலையில், அரசின் அனுமதியை 2வது தடவை பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு 70 வயது நிறைவடையும் போது 10 சதவீதமும், 80 வயது நிறைவடையும் போது மேலும் 10 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்றார்.