/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 26, 2025 04:48 AM
காரியாபட்டி : மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மல்லாங்கிணரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்காகவும் வெளியூர்களுக்கு செல்லவும் நூற்றுக்கணக்கானோர் அங்கு வருகின்றனர். மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பல்வேறு பஸ்கள் பிடித்து மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வந்து செல்லும் விருதுநகர், காரியாபட்டி பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என பலரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்கள் தொகை அடிப்படையில் அங்கு பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் வெளியூர்களுக்கு பஸ் இயக்கப்படும். அங்கிருந்தே பல்வேறு ஊர்களுக்கு செல்ல பயணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். உரிய நேரத்தில் செல்லவும், நேரம், பணம் மிச்சமாகும். இதனை கருத்தில் கொண்டு பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

