/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீன் கடைகள், குப்பையால் சுகாதாரக்கேடு, நாய் தொல்லை அவஸ்தையில் ராஜபாளையம் மக்கள்
/
மீன் கடைகள், குப்பையால் சுகாதாரக்கேடு, நாய் தொல்லை அவஸ்தையில் ராஜபாளையம் மக்கள்
மீன் கடைகள், குப்பையால் சுகாதாரக்கேடு, நாய் தொல்லை அவஸ்தையில் ராஜபாளையம் மக்கள்
மீன் கடைகள், குப்பையால் சுகாதாரக்கேடு, நாய் தொல்லை அவஸ்தையில் ராஜபாளையம் மக்கள்
ADDED : செப் 28, 2025 02:33 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் மீன் கடைகள், குடியிருப்புகளிடையே கொட்டும் குப்பையால் சுகாதாரக் கேடு, நாய்களால் தொல்லை என பல்வேறு சிரமங்களை வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் காமராஜர் நகரில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இப்பகுதி நகரின் ஏ பிரிவில் உள்ளது. அதிக வரி செலுத்தியும் போதுமான அடிப்படை வசதி இல்லை. பழைய பஸ் ஸ்டாண்டிற்கு உள் நுழையும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் காமராஜர் நகரின் மெயின் தெரு வழியாக டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டை அடைகிறது.
பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளால் குடிமகன்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து கிடக்கின்றனர். இதன் அடுத்த பகுதியான ஹாஸ்பிடல் ரோடு ரோட்டில் அனுமதி இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்கிறது.
முறையாக குப்பைகள் அகற்றும் பணி நடைபெறுவதில்லை. பொது போக்குவரத்து அதிகம் உள்ளதால் சமூக விரோதிகள் நடமாட்டம் களவு பிரச்சனைகள் சந்திக்கின்றனர்.
சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ஹாஸ்பிடல் ரோடு கடைசி பகுதியை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாற்றி வைத்துள்ளதால் துர்நாற்றமும் பெண்கள் பகுதி கடக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு இடையே குப்பைகள் குவிப்பதால் சாக்கடைகளில் அடைத்து துர்நாற்றம் அதிகரித்துள்ளது.ஆறாவது குருக்கு தெரு சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளின் போது சேதமான குழாயால் குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறிவிட்டது.