/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2026ல் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து

ADDED : நவ 27, 2025 01:56 AM
சிவகாசி: சிவகாசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழகத்தின் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. அதிலும் பட்டியல் மக்கள் உள்ள பகுதி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு தனி குழு அமைத்து தமிழகத்தில் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன்.
ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் தீண்டாமை பார்க்கப்படுகிறது. சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலில் வேலை செய்யும் பெண்கள் சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொழிலாளர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு என்று சிறப்பு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக்கை, ஒழிக்கவும் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும் தான் ஆட்சியில் பங்கு என வலியுறுத்துகிறேன். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
விஜய் பிரசாரம் 2 கூட்டங்களிலேயே நின்றுவிட்டது. தேர்தல் வந்த பின் தான் எவ்வளவு ஓட்டு வாங்குகிறார் என சொல்ல முடியும்.
கூட்டணி குறித்து அவர்களும் எங்களை அணுகவில்லை, நாங்களும் அவர்களை அணுகவில்லை. ஜனவரியில் நடைபெற உள்ள மதுரை மாநாட்டுக்கு பின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம், என்றார்.