/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகளுக்குள் புகும் வாறுகால் கழிவுநீர் கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்

ADDED : ஜன 23, 2025 03:52 AM

அருப்புக்கோட்டை: அருப்புக் கோட்டையில் வீடுகளில் வாறுகால் கழிவுநீர் வருவதால் மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 24 வது வார்டை சேர்ந்தது ஜோதிபுரம். இங்கு வாறுகால் சரியாக நகராட்சி அமைக்காததால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அந்த பகுதி ரோட்டில் தேங்கி கிடங்காக மாறிவிட்டது. அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் சென்றதால், நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நாடார் மயான ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் முரளி மக்களிடம் சமாதானம் செய்து, வாறுகாலை மீண்டும் ஆய்வு செய்து கழிவுநீர் சீராக வெளியேறும் வகையிலும், ரோட்டை உயர்த்தி போடவும் நகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.