/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி கருத்துக் கேட்பில் மக்கள் எதிர்ப்பு கோஷம்
/
குவாரி கருத்துக் கேட்பில் மக்கள் எதிர்ப்பு கோஷம்
ADDED : ஜூலை 17, 2025 11:41 PM
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் கிரானைட் குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டம் மக்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் முடிந்தது.
திருத்தங்கலில் 10 எக்டேர் பரப்பில் கிரானைட் குவாரி அமைக்க ஜி.பி.கே., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில்  மாவட்ட நிர்வாகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சிவகாசி ஆர்.டி.ஓ., பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் முன்னிலை வகித்தார்.
குவாரி அமைய உள்ள இடத்தின் அருகே உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களும் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து மக்கள் எதிர்ப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையாக அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது.

