/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசப்பந்து மைதானத்தில் அல்லல் தரும் ஆக்கிரமிப்புகள் தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
/
தேசப்பந்து மைதானத்தில் அல்லல் தரும் ஆக்கிரமிப்புகள் தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
தேசப்பந்து மைதானத்தில் அல்லல் தரும் ஆக்கிரமிப்புகள் தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
தேசப்பந்து மைதானத்தில் அல்லல் தரும் ஆக்கிரமிப்புகள் தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
ADDED : ஆக 09, 2025 02:59 AM

விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பு களுக்கு தீர்வு காணாததால் அவை தற்போது நகரின் மற்றொரு மைய பகுதியான தேசப்பந்து மைதானத்தை சூழ்ந்துள்ளது.
விருதுநககர் மெயின் பஜாரில் பல ஆண்டு களாக கடைகளில் ஆக்கிரமிப்பு தீராத தலைவலியாக உள்ளது. இதனால் மாநில நெடுஞ்சாலை ரோடு சுருங்கி பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது. வாகனங்கள் சென்று வர முடியாத சூழல் உள்ளது.
இதற்கு நகராட்சி நிர்வாகமே ஒத்துழைக்கும் வகையில் சில ஆக்கிரமிப்பு வைத்திருப்போரிடம் பணம் வசூலிப்பது போன்ற கேவலமான செயல் பாடுகள் நடக்கின்றன.
இதே நிலை தற்போது தேசப்பந்து மைதானத்தி லும் ஏற்பட்டுள்ளது. பலர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்து கின்றனர். தனியார்வாகன நிறுவனங்கள் பந்தல் போட்டு நாட்கணக்கில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இவை தவிர சிறு சிறு சாலையோர வியாபாரிகள், அதற்கான உரிமம் கூட இல்லாமல், அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் சரி கட்டி ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.
இவற்றிற்கு தீர்வே இல்லாத சூழல் உள்ளது. நகராட்சி நிர்வாகமோ, அதன் நகரமைப்பு பிரிவோ இதை சரி செய்வதில்லை. இந்த அல்லல் தரும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த உரிமம் பெற்ற சாலை வியாபாரிகளை மட்டும் அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கோட்டை விடும் நகரமைப்பு பிரிவு விருதுநகரில் துவக்கத்தில் இருந்தே வாகன நிறுத்த வசதியோடு கட்டடங்கள் கட்டப்படவில்லை. இதற்கான சிக்கலை மக்கள் தற் போது அறுவடை செய்கின்றனர்.
மெயின் பஜாரில் துவங்கி பல்வேறு பகுதி களில் இடநெரிசல் பெரும் பிரச்னையாக உள்ளது. வெயிலுகந்தம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள அனைத்து கடைகளும், ரோடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் கடையை பிடிப்பதற்கு பெரிய தொகை அல்லது அரசியல் பின்புலத்தை பயன்படுத்துவதால் ஒரு முறை அகற்றினாலும், மீண்டும் அவை முளைப்பது நகரின் சாபக்கேடு. ஒட்டுமொத்த நகரின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், தனி நபர்கள் செய்யும் சுய லாப ஆட்டமே இந்த ஆக்கிரமிப்பு.
ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு செய்த தால் தான் இன்றும் மெயின் பஜார் நடக்க முடியாத அளவுக்கு உள்ளது. எனவே தேசப்பந்து மைதான ஆக்கிரமிப்புகளை முளையிலே கிள்ளி அகற்ற வேண்டும்.
வாகனங்கள் நிறுத்தவழியில்லை காளிதாஸ், ம.நீம., மாவட்டச் செயலாளர், விருதுநகர்: தேசப்பந்து மைதானத்தில் தியாகிகள் நினைவாக ஸ்துாபி உள்ளது. அந்த நினைவு சின்னமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது. இரு தபால் நிலையங்கள் இருந்தும் அங்கு வாகனங்களை நிறுத்த வசதி இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன.
தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் வாரக் கணக்கில் கண்காட்சி நடத்துகின்றனர். இதனால் கோயிலுக்கு வருவோர் கூட வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. நிம்மதியின்றி வழிபட செல்லும் சூழல் உள்ளது. கண் காட்சிகள் நடத்த வேறு இட மில்லையா.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தியாக ஸ்துாபியை பரா மரிக்க வேண்டும். பக்தர்கள் சென்று வர வாகன வசதி வேண்டும்.
ஆக்கிரமிப்புகளால்அல்லல் நெல்சன்தாஸ், விருதுநகர்: ஆக்கிரமிப்புகளால் மக்கள் கடும் இடையூறை சந்திக்கின்றனர். நாளக்கு நாள் சாலையோர வியாபார கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். உரிமம் இன்றி பல சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
மக்கள், போக்கு வரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் சாலையோர வியாபாரிகள் விற்பனைகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும். தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தீர்வு அரசியல் கலப்பின்றி உரிமம் பெற்றவர்களை மட்டுமே சாலையோர வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மற்ற வர்களை தடை செய்ய வேண்டும். உரிமம் இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. முன்பு வாகனங்கள் சென்று வரும் நிலையில் இருந்த மெயின் பஜாரில் தற்போது இன்னும் நெருக்கடி அதிகரித்துள்ளது. தேசப்பந்து மைதானம், அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
நகரமைப்பு பிரிவினர், வருவாய்த்துறை, போலீசாருடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்று வதுடன், அதிக தொகையில் அபராதம் விதிப்பதே சிறந்த வழியாக இருக்கும். ஆக்கிரமிப்பாளர்கள் யாருக்காவது பணம் தந்து இடத்தை பிடித்திருப்பது தெரிந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.