ADDED : டிச 26, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் சேவை மைய அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். செயல் தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் ராமராஜ், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் இணைச் செயலாளர் திருப்பதி வரவற்றார்.
20 ஆண்டுகால சங்க செயல்பாடுகள் குறித்து சங்க நிர்வாகிகள் பேசினர். பொருளாளர் தனலட்சுமி வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். உடல் நலம் பேணல் குறித்து டாக்டர் கனகதுர்கா பேசினார்.
இணை செயலாளர் முனிராஜ் நன்றி கூறினார்.

