/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேர்நாயக்கன்பட்டி -- ஆனைக்குட்டம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
/
பேர்நாயக்கன்பட்டி -- ஆனைக்குட்டம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
பேர்நாயக்கன்பட்டி -- ஆனைக்குட்டம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
பேர்நாயக்கன்பட்டி -- ஆனைக்குட்டம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 18, 2024 07:18 AM

சிவகாசி : சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் இருந்து ஆனைக்குட்டம் வழியாக வெற்றிலையூரணி செல்லும் ரோடு சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் இருந்து வெற்றிலையூரணிக்கு செல்லும் வழியில் ஏராளமான பட்டாசு ஆலைகள், கடைகள் உள்ளன. தவிர மத்திய அரசின் வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் இப்பகுதியில் அமைய உள்ளது.
விஸ்வநத்தம் வெற்றிலையூரணி பகுதி மக்கள் வெம்பக்கோட்டை செல்வதற்கு இந்த ரோட்டைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது.
மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.