ADDED : செப் 19, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோயிலுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தக் கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராஜபாளையம் அருகே முகவூர் முத்துசாமிபுரம் செங்குளம் கண்மாய் கரையில் இருளப்ப சுவாமி கோயில் உள்ளது. கோயில் அருகே விவசாய நிலத்தைச் சுற்றிலும் உரிமையாளர்கள் வேலி அமைத்துள்ளனர். இதனால் கோயிலுக்கு செல்ல பாதை வேண்டும் என ராஜபாளையம் தாசில்தார் அலுவலக மரத்தடியில் இருளப்ப சுவாமி படத்தை வைத்து வழிபாடு நடத்தினர். போலீசார், அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கூறியதால் கலைந்து சென்றனர்.