ADDED : நவ 14, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் கலெக்டரிடம் பா.ஜ., கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வகுமார் அளித்த மனு:
விருதுநகர் நகராட்சி பகுதியில் கச்சேரி ரோடு அருகே நகராட்சி இடத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு முழுஉருவ வெண்கல சிலைகள் அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்கு சிலை அமைத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு மக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த தீர்மானத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

