/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு
/
5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு
5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு
5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு
ADDED : ஜூலை 31, 2025 03:26 AM

சிவகாசி : 'சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிறப்பு, இறப்பு மனுக்களை பரிசீலித்து தினமும் 30 சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 10 நாட்களில் அனைத்து சான்றிதழங்களும் வழங்கப்படும்'', என ஆர்.டி.ஓ. பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி ஆர்.டி.ஓ., பாலாஜி அலுவலகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க
அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராஜபாளையம் தாலுகாக்களை சேர்ந்த சாதி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தகுதியான 32 பேருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ், 14 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒரே நாளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட 29 மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ., பாலாஜி கூறுகையில், நிலுவை இல்லாத மனுக்கள் உருவாக்க வேண்டும். இதற்காக 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 316 பிறப்பு, இறப்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்து தினந்தோறும் 30 சான்றிதழ்கள் என வழங்கப்பட உள்ளது. அதன்படி 10 நாட்களில் அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அடுத்த கட்டமாக பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நிலுவை மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். மேல்முறையீட்டு மனுக்கள் மீது 24 மணி நேரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.