நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் டேவிட், கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.