நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறை, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து வறட்சியை தாங்கும் வறண்ட நில பழப்பயிர்களை கலெக்டர் அலுவலகத்தில் நடவு செய்யும் பணியை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.
இதில் 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி, இணைப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

