/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைநீர் வரத்து ஓடையில் பிளாஸ்டிக் கப்புகள்
/
மழைநீர் வரத்து ஓடையில் பிளாஸ்டிக் கப்புகள்
ADDED : ஜூலை 13, 2025 12:15 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மழை நீர் வரத்து ஓலைகளில் குடிமகன்கள் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்திவிட்டு தூக்கி ஓடைகளில் போடுவதுடன் கண்மாயில் சேருகிறது.
அருப்புக்கோட்டையில் பெரிய கண்மாய் தும்பை குளம் கண்மாய்களுக்கு செல்லும் மழை நீர் ஓடையில் உள்ளன. இதில் தும்பை குளம் கண்மாய்க்கு செல்லும் மழைநீர் ஓடை திருச்சுழி ரோடு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. குடிமகன்கள் ஓடையின் கரையில் அமர்ந்து குடித்துவிட்டு, குடிப்பதற்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகளை ஓடையில் வீசி எறிகின்றனர்.
இதனால் மழைநீர் தடை போட்டு கண்மாய்க்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்த மழையில் ஓடை வழியாக வந்த வெள்ளம் குவியலாக கிடந்த பிளாஸ்டிக் கப்புகளால் தடைபட்டு மழைநீர் காலியான இடங்களில் வழிந்து வீணாகியது.
அருப்புக்கோட்டையில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. இவற்றை தடுக்க வேண்டிய நகராட்சி வேடிக்கை பார்க்கிறது. பிளாஸ்டிக் பைகள் கப்புகள் பயன்பாட்டை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.