/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
/
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ADDED : ஆக 23, 2025 05:07 AM

சிவகாசி : சிவகாசி சிறு குளம் கண்மாயில் மாநகராட்சி, பசுமை மன்றம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
சிவகாசி மாநகராட்சியில் தினமும் 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, பசுமை மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், மறுசுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.
அதன்படி சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
இதில் மெப்கோ பொறியியல் கல்லுாரி, அரசு கலைக் கல்லுாரி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி, ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரி, அஞ்சாக் எக்ஸ்னோரா மாணவர்கள் யங் இந்தியா, ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி, சிவகாசி டைமண்ட்ஸ் ஆகிய தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சி சார்பில் மேயர் சங்கீதா, மாநகராட்சி கமிஷ்னர் சரவணன், சுகாதாரத் துறையினர் துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
பசுமை மன்ற நிர்வாகி செந்தில் குமார் கூறுகையில், மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சியுடன் தன்னார்வ அமைப்புகள், கல்லுாரிகளின் மாணவர்களைக் கொண்டு மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட இடத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உள்ளோம்.
அதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட உள்ளோம், என்றார்.