பட்டாசு விபத்து: 5பேர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் அருகே சேதுராமலிங்கபுரத்தில் ஸ்டான்டர்ட் பயர் ஒர்க்ஸ் உள்ளது செப். 18 மாலை 6:30 மணிக்கு இங்குள்ள தொழிலாளி ஜெயக்குமார் மணி மருந்து கலவையை கொட்டி விட்டு அதன் அருகில் நின்று பீடி பற்ற வைத்து மணி மருந்து மீது தீக்குச்சியை வீசியபோது வெடி விபத்து ஏற்பட்டது அவர் படுகாயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உரிமையாளர் ஜெய்சங்கர், மேனேஜர் மாரிசாமி போர் மேன் ரங்கநாதன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இருவர் காயம்
சாத்துார்: சாத்துார் அருகே சிவகாசி விசுவநத்தத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, 60. டூவீலரில் உறவினர் செல்லத் தாயுடன் 50, (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை)சாத்துார் வந்தார். சாத்துார்அருகே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வந்தபோது எதிரில் சிவகாசியை சேர்ந்த சுரேஷ்குமார், 30 .ஓட்டி வந்தவேன் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மாயம்
விருதுநகர்: கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் 42. இவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்து டூவீலர் திருடு போனது தெரிந்தது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.