புகையிலை பாக்கெட் பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்: சாத்துார் கோட்டூர் சாலையில் சிறுக்குளம் அருகே நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு போலீசார் கோட்டூர் நோக்கி சென்ற லோடு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். வேனில் 2.40 கிலோ சாக்கு பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேனை ஓட்டி வந்தசாத்துார் டிரைவர் சரவணபெருமாளை 43. அப்பையநாயக்கன்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
* சாத்துார் நடராஜா தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி, 40. இவரது வடக்கு ரதவீதியில் பெட்டிக்கடையை சோதனையிட்ட போலீசார் மது பாட்டில்களையும் புகையிலை பாக்கெட் களையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: சாத்துார் சோலை பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், 33. இவர் மனைவி செல்வலட்சுமியுடன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். செல்வலட்சுமி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் மனஉளைச்சலுக்குஆளான சிலம்பரசன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
* ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முதுகுடியை சேர்ந்தவர் முனியாண்டி 38, மில் தொழிலாளி. மனைவி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது குடும்ப பிரச்சனையில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் காயம்
சாத்துார்: சிவகாசியை சேர்ந்தவர் பராசக்தி, 52. உறவினரை பார்ப்பதற்காக டிச.31 ல் சாத்துார் வந்தார். மெயின் ரோட்டை கடந்தபோது அமீர் பாளையத்தை சேர்ந்த கணேசன் ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் காயம் அடைந்தார்.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மஞ்சப்பையில் இருந்த ரூ. 2 லட்சம் மாயம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சுக்கில நத்தத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை, 67, இவர் நேற்று முன்தினம் பந்தல்குடி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 2 லட்சம் பணத்தை எடுத்து ஒரு மஞ்ச பையில் வைத்துள்ளார். பின்னர், இருசக்கர வாகனத்தில் திருச்சுழி ரோட்டில் உள்ள பத்திரம் எழுதும் அலுவலகத்திற்கு சென்று விட்டு மதியம் 1:00 மணிக்கு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனார் கோவில் முன்பு சென்றபோது முன்னால் மாட்டியிருந்த மஞ்சள் பையில் கீழ் பகுதி கிழிக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
---மின் ஊழியர் மாயம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரம் அத்திக்கோயில் காலனியைச் சேர்ந்தவர் போத்திராஜ், 27, இவர் கூமாபட்டி மின்சார அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். டிச.31ல் குடும்ப பிரச்சனையில் இவரது தந்தை பரமசிவம் திட்டியுள்ளார். அன்று இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. கூமாபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.