நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுந்தர் 50. இவருக்கு சொந்தமாக நெடுங்குளம் கள்ளிப்பட்டி ரோட்டில் ராம் கணேஷ் பயர் ஒர்க்ஸ் உள்ளது.
இங்கு விதி மீறி பட்டாசு தயாரித்ததாக 2023 நவ. ல் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் உரிமம் பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு பட்டாசு ஆலை இயங்குகியது.
இந்நிலையில் இங்கு விதி மீறி மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது. மேலும் வெடி மருந்துகள் ஆலைக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெடுங்குளம் வி.ஏ.ஓ., பாண்டியராஜன் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.