நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலரில் சேலைசிக்கி பெண் பலி
விருதுநகர்: நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜாத்தி 47. இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி நேற்று முன்தினம் காலையில் தனது டூவீலரில் பின்னால் அமர வைத்து அழைத்து சென்றார்.அப்போது ராஜாத்தியின் சேலை டூவீலர் டயரில் சிக்கியதால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
சாத்துார்: சாத்துார் குருலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சீதாராம், 26. எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் காலையில் என்.ஜி.ஓ.காலனியில் சுப்புராஜ் வீட்டிற்கு சென்று சக எலக்ட்ரீசியனுடன் பணி புரிந்தார். இரவு 6:30 மணிக்கு அங்கு இருந்த கேபிள் டி.வி. வயரை கையில் எடுத்து சுருட்டும்போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.