தவறி விழுந்து பலி
சாத்துார்: சாத்துார் கோ ஆப்பரேட்டிவ் தெருவை சேர்ந்தவர் சிவசுந்தர், 32. இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து சென்று விட்டார். ஆக.14 ல் மது போதையில் வீட்டில் மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோ வழக்கு
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 20.அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் மர்மச்சாவு
ராஜபாளையம்: ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் 29, . சில நாட்களுக்கு முன் கோவையில் இருந்து வேலை பிடிக்காமல் வீட்டிற்கு வந்தவரை காணவில்லை. நேற்று முன்தினம் செண்பக தோப்பு ரோட்டில் உள்ள தனியார் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.