சரவெடிகள் பறிமுதல்: 17 பேர் மீது வழக்கு
சாத்துார் : தாயில்பட்டி அருகே சேதுராமலிங்கபுரம் சிங்கம் பயர் ஒர்க்சில் நேற்று இரவு 11:00 மணிக்கு போலீசார் சோதனை செய்தபோது சிவகாசியை சேர்ந்த பெரியசாமி, சல்வார் பட்டி விஸ்வநாதன்,ஜோதி, பாண்டீஸ்வரி, பாப்பா, புருவம்மாள், சமுத்திரம், சுந்தரி, மகேஸ்வரி, ருக்குமணி ,மாரியம்மாள் ,மருது, வேலுத்தாய், ராமலட்சுமி, மாரியம்மாள், ஆகியோர் அனுமதியின்றி சரவெடி தயாரித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் போலீசரை கண்டதும் தப்பினர். போலீசார் சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சாத்துார் சல்வார் பட்டியை சேர்ந்தவர்கள் மகேஸ்வரன், 29. காளீஸ்வரன் , 28.ஆகியோர் வீட்டில் வைத்து சரவெடி தயாரித்தனர் .அங்கு சென்ற போலீசார் சரவெடிகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
சாத்துார் : சாத்துார் வெங்கடாசலபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சிவகுமார். 45. இவர் இரவு வீட்டு வாசலில் டூவீலரைநிறுத்திவிட்டு துாங்கச் சென்றார் காலையில் எழுந்து பார்த்தபோது டூவீலர் திருட்டு போனது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.